அம்பத்தூர் - Ambattur

அயன் லேடி கோப்பை-கிரிக்கெட் எஸ். டி. ஜி அணி சாம்பியன்

அயன் லேடி கோப்பை-கிரிக்கெட் எஸ். டி. ஜி அணி சாம்பியன்

மாஸ்டர் கிரிக்கெட் கிளப் சார்பில், 7ம் ஆண்டு அயன் லேடி கோப்பைக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, கடந்த 15 நாட்களாக நடந்தது. மகளிருக்கான இந்த டி - 20 போட்டிகள், சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நெல்லை உட்பட மாநிலம் முழுதும் இருந்து, 14 அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ். டி. ஜி. , கிரிக்கெட் அகாடமி மற்றும் நெல்லை குயின்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள், இறுதி போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற எஸ். டி. ஜி. , கிரிகெட் அகாடமி அணி, முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 125 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த, நெல்லை குயின்ஸ் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழந்து, 116 ரன்களில் ஆட்டமிழந்தது. முடிவில், ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில், எஸ். டி. ஜி. , அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிளுக்கு, மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் முன்னிலையில், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், தெற்கு ரயில்வே அணியின் பயிற்சியாளருமான காயத்ரி, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் மகளிர் அணி தேர்வாளர் யுவராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా