திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த போது வளைவில் திரும்பும் போது ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் இளைஞர் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகன எண் (டிஎன்20 சிடி 8379)- ஐ வைத்து வாகன உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை செய்த போது கிடைத்த தகவலால் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் விபத்துக்குள்ளான வாகனம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவருடையது என தெரிந்தது. இதனையடுத்து வாகன உரிமையாளர் கோபிநாத் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் அவர் அரக்கோணம் அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரிய வந்துள்ளது. கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியில் இருந்து வாகனத்தை திருடிக் கொண்டு வேகமாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்