வேளப்பன்சாவடி அருகே குப்பையில் ஏற்பட்ட தீ விபத்து மலமளவென எரியும் குப்பைகள் கரும்புகையால் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் அவதி
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் கொட்டப்பட்டு குப்பைகள் தீப்பிடித்து தற்போது எரிந்து வருகின்றன. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்து வருகிறது. குப்பையில் பயங்கரமாக எரிந்து வருவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் அதனை மர்ப நபர்கள் கொளுத்தி விட்டு செல்வதாலும் தீ விபத்து ஆனது அடிக்கடி ஏற்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பலமுறை தீயைய் அனைத்து விட்டு சென்றாலும் இரவோடு இரவாக குப்பைகள் கொட்டப்படுவதால் இந்த தீ விபத்து ஆனது அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார், நெடுஞ்சாலை துறையினர், வட்டாட்சியர் நடவடிக்கை தேவை என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.