சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது திவாலான திமுக அரசால், பணம் ஒதுக்க முடியாமல், காட்டுப்பள்ளி கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை பழுதாகி முடங்கி கிடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றச்சாட்டு, போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பி. பலராமன் தலைமையில் திண்ணை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் கலந்து கொண்டு கடந்த அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், காட்டுப்பள்ளி கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை பழுது காரணமாக உற்பத்தி முடங்கி விட்டதாக தெரிவித்த அவர் ஊழல் திமுக அரசு திவாலான காரணத்தால் சீரமைப்பு பணிகளுக்கு பணம் ஒதுக்க முடியாமல் முடங்கியுள்ளதாக குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் இது தொடர்பாக ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலையின் சீரமைப்பு பணிகளை தொடங்காவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.