அம்பத்தூர் - Ambattur

அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பால்குட ஊர்வலம்

பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது இக் கோவிலில் 60 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவானது வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று பால்குடம் ஊர்வலம் முனீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி மேல தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை குதிரை முன்னே செல்ல அங்கிருந்த புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளில் வழியே வலம் வந்து அங்காள ஈஸ்வரி கோவிலில் வந்தடைந்தது பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஆலய தலைவர் புண்ணிய சேகரன் மற்றும் அறங்காவல் குழு தலைவர் மீவே. கருணாகரன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా