மத்திய தொழிலக பாதுகாப்பு படை சார்பில் சிறப்பான வரவேற்பு

83பார்த்தது
திருவள்ளூர் செங்குன்றம் ஆர். பி. கிராண்ட் பேலஸில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை சார்பில் சிறப்பான வரவேற்பு.

கடலோர பாதுகாப்பினை வலியுறுத்தி மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்தியாவின் இரு கடற்கரையோரமும் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது
கிழக்கில் மேற்கு வங்கத்தில் தொடங்கி மேற்கில் குஜராத்தில் இருந்து தொடங்கி சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் வருகிற 31 ஆம் தேதி நிறைவடைகிறது ஆந்திர மாநிலம் வழியாக தமிழகஎல்லை ஆரம்பாக்கம் வந்தடைந்த சி ஐ எஸ் எப் வீரர்களை மலர்த் தூவி உற்சாகமாக வரவேற்றனர் இன்று சென்னை வழியாக அவர்கள் கன்னியாகுமரி நோக்கி செல்ல உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கையை ஏற்று தமிழக எல்லை வந்தடைந்த சி ஐ எஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்குன்றம் ஆர். பி. கிராண்ட் பேலஸில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் குளிர் பானங்கள் வழங்கி இளைப்பாற வைத்து மறுபடியும் வழி அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி