திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டை வட்டம் அம்மையார் குப்பம் கிராமத்தில் ஏரியில் அருந்ததியர் காலனிக்கு செல்லும் பாதையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள உயரமுத்த மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர் கையை தெரியாமல் லேசாக மேல் தூக்கினாலே தொட்டுவிடும் அளவிற்கு மின் கம்பி உயிருக்கு உலை வைக்கும் வகையில் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. யார் மீதாவது பட்டால் வாகனங்களில் செல்லும்போது உரசினால் உயிர் போகும் நிலையில் உள்ளது. ஏழை அருந்ததிய வகுப்பு மக்கள் அன்றாட பணிக்கு செல்லும் வழியில் பொதுமக்கள் விளைநிலங்களுக்கு விவசாயப் பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் மட்டுமின்றி கோயிலுக்கு சாமி கும்பிட இவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் மின்மாற்றி அமைந்துள்ளது.
ஆர்கே பேட்டை வட்டம் அம்மையார் குப்பம் பகுதியில் டிப்பர் லாரி மோதி அரசு பேருந்தில் பயணித்த நெசவாளர்கள் 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் இன்னும் மறையாத நிலையில் இப்படி ஆபத்தான வகையில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அம்மையார்குப்பம் ஏரிக்கரையின் மீது ஆபத்தை உணராமல் வைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.