மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் கிராம சபை கூட்டம்

75பார்த்தது
திருத்தணி அருகே சத்தரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரஞ்செயபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் முன்னிலையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.
ஆட்சியர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் என்பதால் கிராம மக்கள் கூட்டத்தில் பங்கேற்று குடிநீர் பள்ளிக்கூடம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்களது கிராமத்தில் குடிப்பதற்கே தண்ணீர் வருவதில்லை என்று புகார் தெரிவித்தனர் தங்கள் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர் கிராம சபையில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தரமற்ற பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்டவர்கள் செல்போனில் பேசிய படியும் whatsapp பார்த்தபடியே இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி