திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி இவர் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை அவரது வீட்டிலேயே அதற்கு மூன்று வேலை உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நாய் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வழிமாறி சென்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அந்த நாய் வீட்டிற்கு வராததால் பல்வேறு இடங்களில் தேடிய முரளி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதிகத்தூர் பகுதியில் நாயை கண்டுபிடித்தார் அவரது இருசக்கர வாகனத்தில் நாயை ஏற்றிய நிலையில் அது முரளியை கண்டதும் பாசத்தில் அங்கும் இங்குமாய் ஓடி இரு சக்கர வாகனத்தில் ஏறாமல் பின்னாலே ஓடி வந்தது இதை அடுத்து அவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு மப்பேடு வரை இருசக்கர வாகனத்தை தொடர்ந்து ஓடியது இதனை அடுத்து மப்பேடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் அதற்கு பன் கேக் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்து மீண்டும் வாகனத்தில் ஏற்ற முயன்றும் ஏறாததால் அவர் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து பின்னாலேயே வளர்ப்பு நாய் சென்றது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வழி மாறி சென்ற நாயை தேடி சென்ற போது வளர்ப்பவரை பார்த்ததும் சந்தோஷம் அடைந்து பின்னாலேயே ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த நாயை அனைவரும் பாராட்டு வருகின்றனர்