திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பு மும்மொழிக் கொள்கை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது தான் என் கருத்து ஆனால் இருமொழிக் கொள்கை என்பது இந்தியாவுக்கே பொருந்தும் என்பது என் கருத்து ஏனென்றால் இரு மொழி கொள்கை என்றால் எல்லா தேசிய இனங்களின் தாய் மொழியும் காப்பாற்றப்படும் பிறகு உலகத்தோடு உறவு கொள்ள ஆங்கிலம் என்னும் துணை மொழியும் பாதுகாக்கப்படும் எனவே இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக் கொண்டால் இந்தியாவுக்கே பொருத்தமான ஒரு மொழி கல்வியாக அது இருக்கும் மும்மொழி கொள்கை என்பது சிலருக்கு பாதிப்பு பலருக்கும் பாதிப்பு என்பதாக முடியும் தமிழர்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் படிப்பதால் உலகத்தை ஆளுகிறார்கள் எனவே தாய் மொழியின் கருத்துக்களை தாய் மொழியின் பெருமைகளை உயர்த்தி பிடிப்பதற்கு இரு மொழிக் கொள்கைதான் இயல்பானது ஏதுவானது, திருக்குறள் தான் சென்று சேர வேண்டிய தூரத்தை இன்னும் அடையவில்லை என்பது எங்கள் கருத்து அந்த கருத்தை சரி செய்யும் விதமாக அந்த கருத்துக்கு இன்னும் ஊட்டம் சேர்க்கும் விதமாக முதலமைச்சரவர்கள் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஆணையிட்டு இருக்கிறார் நிதி ஒதுக்கி இருக்கிறார் இது திருவள்ளுவருக்கு பெருமை என்பதைவிட தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.