நெல்லை: கோயில் உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது
நெல்லை பணகுடி ஸ்ரீ ரகுநாதபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் அங்குள்ள சுடலை கோவில் தர்மகர்த்தாவாக இருக்கிறார். இன்று சந்திரசேகர் கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் புகாரில் பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விஜயன்(25) என்பவர் தான் ரூ. 774 பணத்தை திருடியது தெரியவந்தது. விஜயனை போலீசார் இன்று கைது செய்தனர்.