ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் மணிநந்தன் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கழிப்பதை தடை செய்ய வேண்டும் நெல்லையப்பர் கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது