நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று(செப்.30) மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் குடத்துடனும் பதாகை ஏந்தியும் அரங்கிற்குள் வந்தார். அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் தான் கொண்டு வந்த தண்ணீர் அடங்கிய குடத்துடன் இருக்கையில் அமர்ந்தார்.