போடி வனப்பகுதியில் கருங்காலி மரத்தை வெட்டி கடத்தி விற்பனை செய்வதாக சென்னை நுண்ணறிவு பிரிவு வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வத்தலகுண்டு பகுதியில் வாகன தணிக்கையின் போது ஆட்டோவில் கருங்காலி மரங்களை கொண்டு சென்றவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் குரங்கணி கிராமத்தைச் சேர்ந்த 3 பேரையும் வத்தலகுண்டைச் சேர்ந்த 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.