போடி நகரில் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

61பார்த்தது
போடி நகரில் பட்டாசு கடைகளில் நகர் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் ஆய்வு


தேனி மாவட்டம் போடி நகரில் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு களை எவ்விதம் அமைத்துக் கொள்வது என்பது என கருத்துரை வழங்குவதற்காக இன்று போடி நகர பட்டாசு கடைகளில் வட்டாட்சியர் சந்திரசேகர் தீயணைப்பு நிலையம் அலுவலர் உதயகுமார் போடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் கோபிநாத் ஒருஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின்போது பட்டாசு கடைகளில் மரங்களை பயன்படுத்தி ஸ்டால்கள் அமைப்பதை தவிர்க்குமாறுஅறிவுறுத்தினர். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பட்டாசு கடைகளில் தொலைவில் வைக்கும் படியும் வரும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியின்றி விற்பனைப் பொருட்களை வழங்குவதில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துரைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி