போடியில் தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியின் முன்பு இன்று விலைவாசி உயர்வு சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை எம். பி. இராமர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த போடி வடக்கு நகரச்செயலாளர் சேதுராம் மற்றும் போடி தெற்கு நகரச் செயலாளர் மாரியப்பன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், போடி வடக்கு நகர துணைச் செயலாளர் V. M. ஆனந்தன், நகர இணைச் செயலாளர். நந்தினி பாண்டியராஜன், போடி தெற்கு நகர இணை செயலாளர் முனியம்மாள், நகர துணைச் செயலாளர் வேல்முருகன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என திரளாக கலந்துகொண்டு மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு கோஷங்களை எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி