போடிநாயக்கனூர் - Bodinayakanur

தேனி: இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்; சீறிப்பாய்ந்த மாடுகள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் இளைஞர் அணி சார்பில் 4ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்லை பந்தயம் இன்று (நவம்பர் 13) காலை நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர்.  இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டுவண்டிகள் ஐந்து பிரிவுகளாகவும் இதில் தட்டான்சிட்டு, ஜோடிதேன்சிட்டு, பூஞ்சிட்டு, புள்ளிமான்சிட்டு, முயல்சிட்டு என 5 வகையான பிரிவுகளில் 150க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் நிர்ணயிக்கப்பட்ட தூரங்களை கடந்து வந்து வெற்றி பெற்றன. முதல் நான்கு மாடுகளுக்கு 20,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வீடியோஸ்


தேனி