தேனி: பார் அசோசியேசன் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
போடிநாயக்கனூர் பார் அசோசியேசன் தலைவராக வழக்கறிஞர் கணேசனும், செயலாளராக வழக்கறிஞர் சந்திரசேகரும், பொருளாளராக வழக்கறிஞர் கோபிநாதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் பொன். சுப. பாண்டிகுமார் மற்றும் போடி நகர் பொதுமக்களும் இணைந்து பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.