பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி
மகாராஷ்டிரா வார்தா மாவட்டத்தில் இன்று (நவ.6) பயங்கர விபத்து நடந்தது. அங்குள்ள இரும்பு ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தீயில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானதாக தெரிகிறது. மேலும், 18 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.