உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வயிறை ஓரளவு நிறைவாக வைத்துக்கொள்ளும் உணவுகளை காலையில் சாப்பிடுங்கள். தயவு செய்து துரித உணவுகளை காலையில் தவிர்த்துவிடுங்கள். காலை உணவை தேர்வு செய்வது என்பது மிக முக்கியம். அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் உள்ளிட்டவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்.