‘கார் லைசன்ஸை வைத்து லாரியும் ஓட்டலாம்’ - நீதிமன்றம் உத்தரவு

68பார்த்தது
‘கார் லைசன்ஸை வைத்து லாரியும் ஓட்டலாம்’ - நீதிமன்றம் உத்தரவு
இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடந்தது. அப்போது, “சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு, LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் தான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள வாகனங்களை ஓட்டலாம்” என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி