சீரகம் நமது சமையலில் ஒரு முக்கிய அங்கமாகும். இது வெறும் சுவைக்கு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களுக்காகவும் சேர்க்கப்படுகிறது. பசியை கட்டுப்படுத்துவதிலும், செரிமானத்தை சீராக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் சீரகம் உதவுகிறது. தொடர்ச்சியாக சீரகத்தை சாப்பிடுவதால் இடுப்புப்பகுதி மெலிதாக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றன. சாப்பாட்டில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதால் உடல் எடையும் குறையும், தேவையற்ற கொழுப்பையும் குறைக்கும்.