சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று (நவ. 06) ஆய்வு செய்தார். அங்கு குளத்தில் மலர்ந்திருந்த பூக்களை பார்த்து குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது என கிண்டலாக கூறினார்.