திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள இரும்பு பைப் கிடங்கில் இருந்து அளவுக்கு அதிகமாக பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று நேற்று (நவ. 05) சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சாலை ஏற்றத்தில் ஏற முடியாமல் லாரி திணறியது. பின்னர் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.