தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை நடிகை கஸ்தூரி கூறிய நிலையில் கண்டனங்கள் வலுத்ததால் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் அவரை மன்னிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். கஸ்தூரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.