சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நேற்று (நவ. 05) இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.