சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சேகர் தனது நண்பர்களுடன் நேற்று (நவ. 05) காரில் சென்று கொண்டிருந்த போது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதையடுத்து எதிரே சென்ற பைக்கின் மீது கார் மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பைக் ஓட்டுனர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.