பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி

73பார்த்தது
பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி
மகாராஷ்டிரா வார்தா மாவட்டத்தில் இன்று (நவ.6) பயங்கர விபத்து நடந்தது. அங்குள்ள இரும்பு ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தீயில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானதாக தெரிகிறது. மேலும், 18 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி