தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்த போது மதுரையை சேர்ந்த சாய் செந்தூரபாண்டி என்ற சிறுவனின் கண்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தாயார் கூறும்போது, "தீபாவளியை எப்போதும் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள், எங்கள் வீட்டில் நிறைய பேர் இருப்பதால் யாராவது என் மகனை கவனிப்பார்கள் என விட்டது தான் என் தவறு. மண்ணும் அவன் கண்ணுக்குள் சென்றுவிட்டது” என்றார்.