திருவையாறு - Thiruvaiyaru

பாபநாசத்தில் சிபிஐ எம். எல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் சிபிஐ எம் எல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் அனைத்து கிராமப்புற ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிடவும் ஊரக வேலை திட்டத்தில் 200 நாள் வேலை வழங்கவும் ஊதியமாக ரூ. 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரபு பூமிநாதன் , கணேசன், செல்லதுரை , விஜயாள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా