பூதலூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

50பார்த்தது
பூதலூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த செங்கிப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு வாய்க்கால் மூலமாக 133, ஏரிகளில் நீரை நிரப்பி அதன் முலம் ஒருபோக நெல் சாகுபடிக்காக ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று பசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு 12, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்தில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட பல லட்சம் உபரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் சென்றது விவசாயத்திற்காக புதியகட்டளை மேட்டு வாய்க்காலிலும் உய்யக்கொண்டான் நீடிப்பு வாய்க்காலில் திறக்கப்பட்டதாக கூறப்படும் நீரானது இன்னும் வரவில்லை. தண்ணீர் ஏரிகளில் இல்லாததால் 12 ஆயிரம் ஏக்கர் தரிசாக கிடக்கிறது.

மனவேதனை அடைந்த விவசாயிகள் நீர் கேட்டு பலகட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மெத்தனமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோசங்களை எழுப்பியும் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டமும் தஞ்சை -தேசிய நெடுஞ்சாலையை மறியல் போராட்டம் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி