
திருக்காட்டுப்பள்ளி: தீ விபத்து மூதாட்டி பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணை அருகே ஒரத்துாரில் கேஸ் அடுப்பில் தீ பற்றி சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். ஒரத்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜப்பா மனைவி மணியம்மாள் (79). இவர் கடந்த 13ம் தேதி மாலை சமையல் செய்யும்போது கேஸ் அடுப்பில் சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அன்புநேசன் கொடுத்த புகாரின் பேரில் தோகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.