தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், வடசருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், பாபநாசம் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் முருகன், கருத்தாளர் முருகானந்தம், உதவி ஆசிரியை அமுதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள், இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக லலிதா, துணைத்தலைவியாக சோபனா மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இக்கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பின்கள் கலந்து கொண்டனர்.