திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜருக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேகப் பொருட்களாலும் அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை குமார் குருக்கள் மேற்கொண்டு இருந்தார்.