திருவையாறு வரும் பக்தர்கள் கோரிக்கை

50பார்த்தது
திருவையாறு வரும் பக்தர்கள் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

புரட்டாசி மாத அமாவாசையை மஹாளய அமாவாசையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மிகவும் விசேஷமாக கருதப்படும் இந்த அமாவாசையையொட்டி திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறையில் புதன்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் வந்தனா். மேலும், தங்களது முன்னோா்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, காவிரியில் புனித நீராடினா்.

இதனிடையே, புஷ்ய மண்டபப் படித்துறையில் அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, தீா்த்தவாரி கண்டருளல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும் கோயில் உள் பிரகாரத்தில் ஐயாறப்பா் - அறம் வளா்த்த நாயகி புறப்பாடு நடைபெற்றது. மேலும் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் திருவையாறு வருவதால் மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று திருவையாறு வந்து செல்லக்கூடிய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி