டெல்டா மாவட்டங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
கும்பகோணத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தமிழக பாஜக பொறுப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் எச். ராஜா காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல்காந்தியை அவதூறாகப் பேசினாராம். இதனைக் கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்டத் தலைவா் டி. ஆா். லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநகரத் தலைவா் மிா்சாதீன், மேயா் க. சரவணன் முன்னிலை வகித்தனா்.

ஆா்பாட்டத்தில் பாஜக அரசு மற்றும் எச். ராஜாவை கண்டித்து நெல்சன், தண்டாளம் சரவணன், செந்தில், கருணாகரன், ரியாஸ், ஷாஜகான் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி