தஞ்சை மாவட்ட திவ்ய தலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு

65பார்த்தது
தஞ்சை மாவட்ட திவ்ய தலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திவ்யதேசம் பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8. 30 மணிக்கு குளிர்சாதன பேருந்து புறப்படும், திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோயில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று இரவு தஞ்சாவூர் வந்தடையும், நபர் ஒன்றுக்கு ரூ. 1400 கட்டணம். பயணத்திற்கு சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், வலைதள முகவரி www. ttdconline. com மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலை பேசி எண். 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044- 25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும். வலைதள முகவரி www. ttdconline. com மூலமாகவும் விவரங்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி