கும்பகோணத்திலிருந்து 393 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து வார விடுமுறை தினங்களில் 393 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தெரிவித்துள்ளாா். வார விடுமுறைக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 243 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகள் கூடுதலாக மொத்தம் 393 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் ஊா்களுக்கு செல்ல ஞாயிறு மற்றும் திங்கள் நாள்களில் சென்னை வழித்தடத்தில் 150 சிறப்புப் பேருந்துகளும், பிறத் வழித்தடங்களிலும் 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.