
அதிராம்பட்டினம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவர்கள் வசிக்கும் பகுதி அருகே கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் கசடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும். எனவே இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை மாற்றி பொதுமக்கள் வசிக்காத வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.