பட்டுக்கோட்டை: குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவி

65பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி வடக்கு ஊராட்சியை சேர்ந்த செல்வி சாராஸ்ரீ பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலையில் பயின்று, தற்பொழுது திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் நடந்துமுடிந்த 76 வது குடியரசு தின விழா என்எஸ்எஸ் அணிவகுப்பில் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சார்பில் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டார். 

அதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதியை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்று நேற்று காலை 7மணி அளவில் பட்டுக்கோட்டை வந்தபொழுது. அவரை கௌரவிக்கும் வகையாக ரோட்டரி சங்கங்கள் தன்னார்வலர்கள் கூடி மேளதாளத்துடன், மாலை மரியாதை செய்து மாணவியை கௌரவித்தனர். இன்று பட்டுக்கோட்டை வந்த மாணவி சாராஸ்ரீ கூறியதாவது: தமிழகத்தின் சார்பில் சென்ற 12 பேருக்கும் விமான டிக்கெட் முதல் தங்கும் இடம் வரை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ததாகவும், மற்ற மாநில மாணவர்களுக்கு அந்த சலுகை இல்லாததால் தாங்கள் தமிழ்நாடு அரசை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி