வெட்டிக்காடு பகுதியில் தடுப்பணை அடிக்கல் நாட்டு விழா

80பார்த்தது
வெட்டிக்காடு பகுதியில் தடுப்பணை அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு சில்லத்தூர் பகுதியில்
மகாராஜாசமுத்திரம் ஆற்றில் தடுப்பணை கட்டக் கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று புதிய தடுப்பணை கட்ட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதிய தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முன்னாள் எம்எல்ஏ மகேஷ்கிருஷ்ணசாமி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல், உதவி பொறியாளர்கள் புவிராஜன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தடுப்பணை கட்டுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பாதுகாக்கப்படுவதோடு, கோடை காலத்தில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என்று கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் நீர்வளத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி