

பட்டுக்கோட்டை இந்தி திணிப்பை கண்டித்து மாணவர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே, மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், இந்தி திணிப்பைக் கண்டித்து திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பால. மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பழனிவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை, பேராவூரணி நா. அசோக்குமார், மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், ஒன்றியச் செயலாளர்கள் மு. கி. முத்துமாணிக்கம், கோ. இளங்கோ, ஆர். இளங்கோ, பார்த்திபன், பா. ராமநாதன், சோம. கண்ணப்பன், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாணவர் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் இருந்து தலைமைத் தபால் நிலையம் வரை மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.