கடலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் ஞானப்பழனி (56) என்பவர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஞானப்பழனி நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆவார். அண்மை காலமாக ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.