மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நற்சான்று கொடுத்ததாக தனக்குத்தானே ஓ.பன்னீர்செல்வம் தம்பட்டம் அடித்துக்கொள்வதாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜெயலலிதாவே தன்னிடம் சொன்னதாக கூறினார். மேலும், அதிகாரம் வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் எந்த எல்லைக்கும் செல்வார். மத்திய அமைச்சர் பதவி ஆசையில் பலாப்பழ சின்னத்தில் அவர் போட்டியிட்டதால்தான், ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது என்றார்.