எதிர்வரும் கோடை காலத்தை எதிர்கொள்ளும் வகையில், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க கர்நாடக அரசு கடும் கெடுபிடி காட்டி வருகிறது. பெங்களூருவில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, கடும் கட்டுப்பாடுகளை விதித்து குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கார் கழுவுதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பெரும்பாலானோர் கார்கள் வைத்துள்ளனர்.