அமெரிக்காவின் மினியாபோலிஸ்-ல் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொழுது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.