தஞ்சாவூர்: குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு ஏ கிரேடு வழங்கல்

68பார்த்தது
தஞ்சாவூர்: குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு ஏ கிரேடு வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு குழு அறிக்கை படி ஏ தகுதி நிலை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்லூரிகளிலேயே ஐந்தாவது முறையாக இந்த மதிப்பீட்டுக்குச் செல்லும் முதல் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய தர மதிப்பீட்டு குழு அறிக்கை அடிப்படையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரிக்கு ஏ தகுதி நிலை கிடைத்துள்ளது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் உள்ளதர உறுதி குழு தலைவர் பானு குமார் மற்றும் உறுப்பினர்கள், தேர்வு நெறியாளர் மலர்விழி மற்றும் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மேற்கொண்டனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த ஆய்வுக் குழுவினர் உள்கட்டமைப்பு வசதி, கல்வி மற்றும் ஆய்வின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தமிழக அரசின் பிரதிநிதியாக தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரோசி, பாரதிதாசன் பல்கலைக்கழக பிரதிநிதி சிவசுதா உள்ளிட்டோர் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர். 

இந்தக் குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஏ தகுதிநிலையை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பெற்றுள்ளது. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி ஏ தகுதி நிலை பெற்றதை அறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் ரோசி ஆகியோர் பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி