அமித்ஷாவை கண்டித்து பட்டுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்தும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  
இதையொட்டி, பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். வாசு, எஸ். பாலகிருஷ்ணன், கு. பெஞ்சமின், என். கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மூத்த தலைவர் ஆர். சி. பழனிவேலு நிறைவுரையாற்றினார்.  
ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி (பேராவூரணி), பாஸ்கர் (திருவோணம்), மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் ஏ. மேனகா மற்றும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடைக்கமிட்டிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோ‌ரியு‌ம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி