புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வேலை முடித்து திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதி நோக்கி சரக்கு ஏற்றும் குட்டியானை வாகனத்தில் சென்ற 30 க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயல் கிராமத்தின் அருகே கருங்குளம் பகுதியில் செல்லும் பொழுது அதிகபாரம் ஏற்றி சென்றதால் குட்டி யாணை வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. துர்க்கை அம்மாள் என்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் 32 பேர் மிக ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மட்டும் அந்த வழியாக சென்று தனியாருக்கு சொந்தமான கார்களில் ஆட்களை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சர், வீல் சேர் போதுமான அளவில் இல்லாததும் அதை இயக்குவதற்கான உதவியாளர்கள் இல்லாததாலும் பொதுமக்களே காயம்பட்ட ஒவ்வொருவரையும் கைகளில் தூக்கி சென்றனர். 35 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதில் மாரியம்மாள் (வயது 55) மற்றும் சுமதி (வயது 35) இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.