தஞ்சாவூர்: தீவிபத்து; நிதியுதவி வழங்கல்

71பார்த்தது
தஞ்சாவூர்: தீவிபத்து; நிதியுதவி வழங்கல்
மதுக்கூர் அருகே வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி கூலி தொழிலாளி. இவரும் இவரது மகள் மற்றும் தாயாரும் தங்கள் வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக வயலுக்கு கொண்டு சென்று மேய்த்து விட்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர். 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் அவர்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் சி. வி. சேகர், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலர் தண்டபாணி, ஒன்றிய ஜெ பேரவை செயலர் கார்த்திக் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய தேவையான போர்வைகள், துணிமணிகள், சாப்பாடு ஆகியவற்றை வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி